1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:23 IST)

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்: அக்சர் பட்டேல், ஜடேஜாவின் அரைசதத்துடன் முடிந்த 2வது நாள் ஆட்டம்!

jadeja axar
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்: அக்சர் பட்டேல், ஜடேஜாவின் அரைசதத்துடன் முடிந்த 2வது நாள் ஆட்டம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்கள் எடுத்துஆட்டம் இழந்த நிலையில் தற்போது இந்தியா முதலில் முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் அபாரமான சதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் இன்னிங்ஸ் அதன் பிறகு மளமளவென விக்கெட் விழுந்தாலும் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் நிலைத்து விளையாடி வருகின்றனர். இருவரும் அரை சதம் அடித்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
 
இன்றைய ஆட்டநேரம் முடிவில் இந்தியா ஏழு விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் ள் எடுத்துள்ளது என்பதும் ஆஸ்திரேலியாவை விட 144 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran