வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:21 IST)

முடிந்ததா ரஹானேவின் டெஸ்ட் வாழ்க்கை?

இந்திய அணியின் டெஸ்ட் துணைக்கேப்டன் அஜிங்க்யே ரஹானே தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் ரஹானே. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரைக் கூட வென்று கொடுத்தவர் ரஹானே. ஆனால் அவரின் பேட்டிங் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் லார்ட்ஸில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஆட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அவரை நீக்கிவிட்டு அடுத்த போட்டியில் ஹனுமா விஹாரியை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் கேரியர் இத்தோடு முடிந்துவிட்டதாகவும் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.