1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (08:30 IST)

வெளிநாடுகளில் வைத்தாவது ஐபிஎல் நடத்துவோம் – பிசிசிஐ பிடிவாதம் !

கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 8000 பேர் இறந்துள்ளனர். மேலும் சுமார் 2 லட்சம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் 150 ஐ நெருங்கி விட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்படுமா என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இதனால் பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்திலாவது வெளிநாடுகளில் வைத்தாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

பிசிசிஐ யின் இந்த முடிவு எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.