செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (14:59 IST)

மகளிர் டி20 இறுதிப்போட்டி: வங்கதேசத்திடம் தோற்ற இந்திய அணி

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதித்தொடரில், இந்திய அணி வங்கதேசத்திடம் தோற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
நேற்றைய அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி அபார பெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை அடைந்தது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா-வங்காளதேச அணிகளுக்கான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 56 ரன்களை எடுத்தார்.
 
113 ரன்கள் எடுத்தால் வெற்றி, என களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வியால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.