ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (08:23 IST)

ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம்.. பதக்க பட்டியலில் 16வது இடம்..!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் கடந்த சில நாட்களாக பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

இந்திய வீரர் நவ்தீப் சிங் ஈட்டி எரிதல் போட்டியில் எப்41 பிரிவில் தங்கம் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை தவறவிட்ட நவ்தீப் சிங், பாரீஸில் தங்கத்தை வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நவ்தீப்சிங்  47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்து இரண்டாம் இடத்தில் தான் இருந்தார். ஆனால் முதல் இடத்தில் இருந்த ஈரான் வீரர் சாதிக் பேட் சாயாவுக்கு 2 மஞ்சள் கார்டுகளை பெற்ற காரணத்தால் அவர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி 13, வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா, இரண்டாம் இடத்தில் பிரிட்டன், மூன்றாம் இடத்தில் அமெரிக்கா ஆகிய ஆகிய நாடுகள் உள்ளன என்பதை குறிப்பிடத்தக்கது.

Edited by Siva