திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (20:18 IST)

பெண்கள் டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி

பெண்கள் டி-20 உலக கோப்பை: இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி
பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததையடுத்து இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் அடித்தது.  வெர்மா 39 ரன்களும் ரோட்ரிகஸ் 34 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 143 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச பெண்கள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய பெண்கள் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் பூனம் யாதவ் மீண்டும் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரெட்டி மற்றும் பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் கெய்க்வாட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் எடுத்து குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது