திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:02 IST)

மூன்றாவது டெஸ்ட்…டாஸ் வென்று சொதப்பும் இந்தியா!

மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் சற்று முன்னர் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ராகுலும் ரோஹித்தும் களமிறங்கினர். நான்கு ஓவர்களுக்குள்ளாகவே ராகுல் ரன்கள் எதுவும் எடுக்காமலும் புஜாரா ஒரு ரன்னிலும் நடையைக் கட்டினர். தற்போது கோலியும் ரோஹித் ஷர்மாவும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.