1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (14:38 IST)

இந்தியா பேட்டிங்: கே.எல்.ராகுல் அபார அரைசதம், ஆனாலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள்:

ind vs zim
இந்தியா பேட்டிங்: கே.எல்.ராகுல் அபார அரைசதம், ஆனாலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள்:
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. சற்று முன் வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்துள்ளது. கே.எல்.ராகுல்  அபாரமாக விளையாடி 35 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் விராட் கோலி 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டாலும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றாலும் எந்தவிதமான பயனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva