செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:20 IST)

327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலாவது நாளில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் நேற்று 2-வது நாளில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று 3வது நாளாக இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேஎல் ராகுல் 123 ரன்களும் மயங்க் அகர்வால் 60 ரன்களும் ரஹானாஅ 48 ரன்களும் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டி ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த போட்டியை டிராவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது