திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 ஜூன் 2022 (07:58 IST)

இன்று இறுதி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

indvssa
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதுவரை நடைபெற்ற 4 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், வென்றுள்ளன. 
 
இந்த நிலையில் இன்று 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது/ இன்றைய போட்டியில் வெல்லும் அணி தான் இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெல்வதற்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்