செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (13:32 IST)

நாளை தொடங்குகிறது டி20 தொடர்.. நியூசிலாந்து பதிலடி கொடுக்குமா?

newz vs ind
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் 3-0  என்ற கணக்கில் முழுமையான வெற்றியை இந்தியா பெற்றது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நாளை அதாவது ஜனவரி 27ஆம் தேதி முதல் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தொடங்க உள்ளது. நாளை ராஞ்சி மைதானத்திலும் ஜனவரி 29ஆம் தேதி லக்னோ மைதானத்திலும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் மூன்று ஒருநாள் டி 20 தொடர்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு நாள் தொடரில் வாஷ் அவுட் ஆன நியூசிலாந்து அணி டி20 தொடரில் பதிலடி கொடுக்குமா? அல்லது இந்தியாவின் வெற்றி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva