வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (22:54 IST)

எக்ஸ்ட்ரா கொடுத்த ரன்களை கூட அடிக்காத 8 இந்திய பேட்ஸ்மேன்கள்: பயிற்சி ஆட்டத்தில் பரிதாபம்

எக்ஸ்ட்ரா கொடுத்த ரன்களை கூட அடிக்காத 8 இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கிலும், அதன்பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனை அடுத்து பயிற்சி நாள் போட்டியாக பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகியது.
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய இந்த பயிற்சி போட்டியில் விஹாரி மற்றும் புஜாரா ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 8 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து எடுத்த மொத்த ரன்கள் 25 தான் என்பதும் ஆனால் இந்திய அணிக்கு எக்ஸ்ட்ராவாக கிடைத்த ரன்கள் 26 என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் விஹாரி 101 ரன்களையும்  புஜாரா 93 ரன்களும் அடித்தால் இந்திய அணி 78.5 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நியூசிலாந்து லெவன் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது