செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (11:47 IST)

3-வது ஒரு நாள் போட்டி: வெற்றியை சுவைக்குமா இந்தியா??

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 

 
தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
 
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று பகல்-இரவு மோதலாக நடைபெறுகிறது.
 
கடந்த ஆட்டத்தில் வெற்றியின் விளிம்புக்கு வந்து 6 ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. கேப்டன் டோனி கொஞ்சம் அதிரடியாக ஆடி இருந்தால் முடிவு மாறியிருக்கும். 
 
வைரஸ் காய்ச்சலால் முதல் இரு ஆட்டத்திலும் விளையாடாத சுரேஷ் ரெய்னா, இன்றைய ஆட்டத்திலும் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தோற்கடித்த நியூசிலாந்து அணி, அதே உத்வேகத்தை தொடருவதில் தீவிரமாக இருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.