செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2023 (18:45 IST)

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா.. இரு அணிகளிலும் பெரும் மாற்றம்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று  ராய்ப்பூரில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து  இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இன்று வெற்றி பெற்றால் தொடர வெல்லும். அதேபோல் ஒரு போட்டியில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி இன்று வெற்றி பெற்றால் தொடர் சமனாகும்.
 
 இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 5 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்திய அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளில் விளையாடும் வீரர்களின் முழு விவரங்களை இதோ:
 
இந்தியா: ஜெய்ஸ்வால், ருத்ராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், தீபக் சஹார், ரவி பிஷ்னாய், அவேஷ்கான், முகேஷ் குமார்
 
ஆஸ்திரேலியா: ஜோஷ், ட்ராவிஸ், மெக்டர்மொட், ஆரோன், டிம் டேவிட், ஷார்ட், வேட், ட்வார்சூயிஸ், க்ரீன், ஜேசன் பெஹண்ட்ரூப், டன்வீர்
 
Edited by Siva