புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (10:12 IST)

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி – முதல் விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்விஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகியோர் இறங்கினர்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாம் பந்திலேயே பிருத்வி ஷா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதையடுத்து களமிறங்கிய புஜாராவும் மயங்கும் ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்து தடுமாறி வருகின்றனர். சற்று முன்பு வரை இந்தியா 7 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.