1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (15:19 IST)

500 ரன்களை கடந்தது இந்திய அணி.. இரட்டை சதத்தை நோக்கி விராத் கோஹ்லி..!

virat 100
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான நான்காவது கிரிகெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 500 ரன்களை முதல் இன்னிங்சில் கடந்துள்ளது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிசை விளையாடி வரும் நிலையில் சற்றுமுன் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 516 ரன்கள் எடுத்துள்ளது. 
 
விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 168 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் அவர் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. அதேபோல் அக்சர் பட்டேல் 49 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணியை விட 36 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva