வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (09:46 IST)

பாலோ ஆன் கொடுத்த இந்தியா – இரண்டாவது இன்ன்னிங்ஸிலும் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா !

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆட பணித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க நேற்று ஆட்டநேர முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்களை எடுத்த தடுமாறியது. பின்னர் டுபிளஸ்சி மற்றும் டிகாக் ஜோடி ஓரளவு நிலைத்து நின்று ஆடியது. டூ பிளஸ்சி 63 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடிக்குப் பின்னர் கேசவ் மகாராஜும் பிலாண்டரும் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று விளையாட ஆரம்பித்தனர். அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணற 9 ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்களை சேர்த்தது. ஒருக்கட்டத்தில் இந்த ஜோடியை அஸ்வின் பிரிக்க ஆக தென் ஆப்பிரிக்க 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதோடு நேற்றைய ஆட்டம் முடிந்தது.

இதையடுத்து நான்காம் நாளான இன்று இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் கொடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2 ஓவர்கள் முடிவில் 9 ரன்கள் சேர்த்து 1 விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் விக்கெட்ட்டை இஷாந்த் ஷர்மா வீழ்த்தியுள்ளார்.