திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2017 (12:43 IST)

அரை இறுதிக்குள் நுழையும் முனைப்பில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இன்று மோத உள்ளன.


 
 
இலங்கையுடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்தியாவின் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு தள்ளிப்போனது.
 
இந்நிலையில், இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ள நிலையில் அரை இறுதிக்குள் இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.