ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரரின் அதிரடி ஆட்டம் 59 பந்துகளில் 99 ரன்கள் ...

Sinoj| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2021 (23:51 IST)

ஐபிஎல் -14 வது சீசன் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பிரமாண்டமாகத் தொடங்கவுள்ளது. இதற்காக 8 அணிகள் பங்கேற்ற
ஏலம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.


சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட லிஸ்டில் 292 க்கும் அதிகமானவர்கள் மட்டுமே எடுக்கப்பட்டனர். முக்கியவீரர்கள் இம்முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சூதாட்டப் புகாரில் சிக்கி சில ஆண்டுகாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், இம்முறை எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணியும் எடுக்கவில்லை; கடைசியி;ல் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தி எடுத்தது, ஆனால் வாரிசு விளையாட்டு என நெட்டிசன்கள் இதை விமர்சித்தனர்.

அதேபோல் எந்த அணியினராலும் வாங்கப்படாததால் விலைபோகாமல் இருந்த நியூசிலாந்து வீரர் டேவான் கோன்வே, ஆஸிக்கு எதிரான இன்றைய டி.20 போட்டியில் சுமார் 59 பந்துகளில்
அதிரடியாக விளையாடி 99 ரன்கள் குவித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்தை இந்தமுறை ஐபிஎல் அணிகள் தவறவிட்டுவிட்டதாகவும் திறமையைப் பார்த்து வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டுமெனவும் நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :