திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (23:11 IST)

செரீனாவின் குழந்தை யார் கலரில் இருக்கும். ருமேனியா டென்னிஸ் வீரரின் சர்ச்சைக்கேள்வி

பிரபல டென்னின்ஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் செரீனாவுக்கு பிறக்கும் குழந்தை எந்த நிறத்தில் இருக்கும் என்று கிண்டலுடன் இனவெறி கருத்து கூறிய ருமேனிய நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீரர் லீ நாஸ்டாஸ்டாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



 


கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் தான் கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் தனது டுவிட்டரில் உறுதி செய்தார். அவர் கருப்பின அமெரிக்கராகவும், அவரது காதலர் வெள்ளை இனத்தவரை சார்ந்தவராகவும் இருப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை பாலில் கலந்து சாக்லெட் நிறத்தில் இருக்குமா? என்று இனவெறியைத் தூண்டும் வகையில் லீ நாஸ்டாஸ்ஸ் கருத்து தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இதுகுறித்து டென்னிஸ் சம்மேளத்தின் நிர்வாகிகள் கூறியபோது, 'இனவெறி தொடர்பான கருத்து மற்றும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ருமேனியா அணியின் முன்னாள் வீரர் லீ நாஸ்டாவின் தரக்குறைவான கருத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவர் இனவெறியுடன் கூடிய அர்த்தத்தில் கருத்து கூறியது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை பாயும்' என்று தெரிவித்தனர்.