திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (06:56 IST)

இலங்கை அணி மீதான தடை நீக்கம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை நீக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் விதித்த தடையை ஐசிசி நீக்கியதால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,.
 
இலங்கை கிரிக்கெட் அணி மீது கடந்த நவம்பர் மாதம் விதித்த தடை நீக்கப்பட்டதாக  ஐசிசி தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகக் கூறி, ஐசிசி கடந்த நவம்பர் 10ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநிறுத்தி வைத்தது.
 
இந்த தடையை நீக்கும் முடிவு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகம், அரசாங்கத்தின் தலையீட்டை முற்றிலும் விலக்கி, தன்னாட்சியாக செயல்படுவதாக உறுதியளித்ததையடுத்து எடுக்கப்பட்டது.
 
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை நீக்கப்பட்டது, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இலங்கை அணி தற்போது ஐசிசி உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளது. இந்த தடை நீக்கம், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva