செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:49 IST)

பிரபல கிரிக்கெட் வீரருக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை: ஐசிசி அதிரடி!

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரரும், அணியின் கேப்டனுமான சகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரரான சகிப் அல் ஹசன் சூதாட்டம் தொடர்பான புகாரில் சிக்கியுள்ளார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி கவனம் ஈர்த்தவர் அல் ஹசன்.

இந்நிலையில் அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி சிலர் அவரது போனுக்கு கால் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அல் ஹசன் மறைத்துள்ளார். இதை கண்டுபிடித்த ஐசிசி அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாதபடி இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த சம்பவம் வங்கதேச அணி இந்தியாவுடன் விளையாட இருக்கும் நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.