திங்கள், 13 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:22 IST)

இந்திய முன்னாள் ஹாக்கி கேப்டன் சரண்ஜித் சிங் மரணம்!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மாரடைப்பால் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

1964 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடந்த ஒலிம்பி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது அணியை வழிநடத்திச் சென்றவர் சரண்ஜித் சிங். இதையடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அவர் மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.