செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (21:39 IST)

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமனம்!

Hardik
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடி வரும் நிலையில் அடுத்ததாக அயர்லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளது. அங்கு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  நிலையில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
இம்மாத இறுதியில் அதாவது ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.