புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 மே 2020 (17:44 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியாதான் காப்பாத்தனும் – மூத்த வீரர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சேப்பல் இந்தியா டெஸ்ட் போட்டிகளைக் கைவிட்டால் அது இறந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சேப்பல் கேப்டன் கங்குலியுடனான சர்ச்சைகளுக்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 71 வயதான சேப்பல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு போதிய ஆதரவு இல்லாதது குறித்து தனது ஆற்றாமையைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு நேர்காணலில் அவர் ‘இந்தியா கைவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும். இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மட்டுமே இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உருவாக்குவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளைக் காப்பாற்ற முடியும். அப்படி செய்தால் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள். இந்திய அணியின் கேப்டன் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்தான் உச்சம் என சொல்லி இருக்கிறார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என்று அவர் தன் கவலையைத் தெரிவித்துள்ளார்.