திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (07:49 IST)

19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை போராடி கைப்பற்றிய ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். 

 
நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். அரையிறுதி போட்டியில் நடாலை வென்ற ஜோகோவிச்ச் இறுதிச்சுற்றில் சிட்சிபாஸுடன் மோதினார். 
 
சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.