திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (12:06 IST)

சென்னையில் கார் பந்தயம்.. மீண்டும் நடைபெறும் பணிகள்.. ஆகஸ்ட் 31ல் ஆரம்பம்..!

சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் கார் பந்தயம் நடத்த மீண்டும் நடைபெறும் பணிகள் நடைபெறும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்வ் எளியாகியுள்ளது.
 
சென்னையில் கார் பந்தயம் கடந்த ஆண்டு டிச. 9, 10 தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் கார் பந்தயம்  மீண்டும் நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் இந்த போட்டியை நடைபெறும் என தெரிகிறது.
 
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran