1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (16:25 IST)

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிடும் ரசிகர்கள்..!

அக்டோபர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து அந்த போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் மைதானம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி அகமதாபாத்  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்காக அக்டோபர் 18ஆம் தேதி விமான டிக்கெட் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ரசிகர்கள் மைதானத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அக்டோபர் 18ஆம் தேதி புக் செய்து வருவதாகவும் அன்றைய தினம் புக் செய்து இரவு மருத்துவமனையில் தங்கி விட்டு மறுநாள் காலை மேட்ச் பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva