வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (08:22 IST)

நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பிய சுவிட்சர்லாந்து! – பரபரப்பான ஈரோ 2020!

ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் கடும் முயற்சியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் தற்போது நாக் அவுட் 16 அணிகளுக்கான போட்டிகள் இறுதியை எட்டியுள்ளன.

நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸுடன் ஸ்விட்சர்லாந்து மோதிய ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. இரு அணிகளுமே அட்ட முடிவில் 3 கோல்கள் அடித்திருந்த நிலையில் பெனால்டி அதிகம் யாருக்கு எதிராக வழக்கப்பட்டது என்ற கணக்கின் அடிப்படையில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ் கால் இறுதி செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

அதேபோல நேற்றைய மற்ற ஆட்டங்களில் ஜெர்மனியை இங்கிலாந்து 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்த ஸ்வீடன் – உக்ரைன் ஆட்டத்தில் உக்ரைன் 1-2 என்ற கணக்கில் ஸ்வீடனை வெளியேற்றியது.