திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (09:48 IST)

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து… முதல் ஒருநாள் போட்டியில் பரபர முடிவு!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி 20 தொடரை இழந்த ஆஸ்திரேலியா, முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸி மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தால் 50 ஓவர்கள் இறுதியில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ அரைசதம் அடிக்க, சாம் பில்லிங்ஸ் சதமடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இல்லாததால் ஆட்டமுடிவில் 275 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் முதல் ஒரு நாள் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.