திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (10:33 IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து தோனியைக் கலாய்த்த கே கே ஆர்!

கே கே ஆர் அணியின் சமுகவலைதளத்தில் தோனியை கேலி செய்யும் விதமாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி கடைசியில் இங்கிலாந்து போராடி டிரா ஆனது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை எடுக்க ஆஸி அணி 10 பீல்டர்களையும் கிரீஸுக்கு அருகேயே நிறுத்தியது. இந்த பீல்ட் செட்டப் டெஸ்ட் கிரிக்கெட்டின் பழமையான நினைவுகளை ஞாபகப்படுத்தும் விதமாக இருப்பதாக பலரும் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து அதன் கீழ் கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி ஐபிஎல் ல் விளையாடிய போது அதே போன்ற பீல்ட் செட்டப்பை கம்பீர் நிறுத்தியதை குறிப்பிட்டு தோனியை கேலி செய்துள்ளது. இது சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி தோனி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.