2019 உலக கோப்பை: பங்கேற்பை குறித்து தோனி தகவல்!!
2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று இந்திய வீரர் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2014 ஆம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, ஜனவரி மாதம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டும் தொடருகிறார்.
இந்நிலையில் தோனி, ஏனெனில் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. இந்த 2 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடக்கலாம். குறிப்பாக இந்திய அணிக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் நான், இந்திய அணியின் போட்டி அட்டவணை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன்.
தற்போது இருப்பது போல், இதே உடல்தகுதியுடன் நீடித்தால் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை தாண்டியும் என்னால் விளையாட முடியும் என தோனி கூறிப்பிட்டுள்ளார்.