1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (08:10 IST)

ரஷித் கானுக்கு தோனி சொன்ன அட்வைஸ்!

ஆப்கன் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானுக்கு தோனி கூறிய அறிவுரையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இன்றைய கிரிக்கெட் உலகில் இளம் வயதில் பல சாதனைகளைப் படைத்து நமபர் 1 ஸ்பின்னராக வலம் வருபவர் ரஷீத் கான். ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ் அணிக்காக விளையாடும் அவர் தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும் எனத் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது ‘தோனியின் தலைமையின் கீழ் விளையாடவேண்டும் என்பது என் ஆசை. ஒரு சுழல்பந்து வீச்சாளருக்கு கீப்பரின் அறிவுரை மிகவும் அவசியம். அதில் தோனி கில்லாடி. அவரிடம் நடந்த உரையாடல்களின் போது எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். பீல்டிங்கில் ஆக்ரோஷமாக இருப்பது பற்றி ’ஆக்ரோஷமாக செயலப்டுகிறாய்… டைவ் அடிக்கிறாய்.. நீ காயமடைந்தால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? ஒரு ரஷீத் கான்தான் இருக்கிறார். மக்கள் உன்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்’ எனக் கூறினார்.