வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (08:14 IST)

அடுத்தடுத்து இரண்டு சதம்: ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்

டுத்தடுத்து இரண்டு சதம்: ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
இந்த ஆண்டு நடைபெற்ற வரும் ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி டெல்லி. இந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார் ஷிகர் தவான்
 
குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. அதேபோல் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததை அடுத்து, ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ஷிகர் தவான்
 
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 5000 ஆண்டுகளுக்கும் மேல் அடித்த வீரர்களில் ஒருவராக ஷிகர் தவான் இணைந்துள்ளார். நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் மிக அபாரமாக விளையாடி டெல்லி அணிக்காக சதமடித்து கொடுத்தாலும் அந்த அணி பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது