1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:19 IST)

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய நபருக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

corona
டெல்லி கேப்பிடல் அணியின் முக்கிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 25வது போட்டி இன்று ஐதராபாத் - கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி அணியின் சியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
மேலும் டெல்லி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு கொரோனா உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அணி நாளை பெங்களூர் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது