பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல்… கவுதம் கம்பீர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு!
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து இ மெயில் மூலமாக மிரட்டல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவ்வப்போது பரபரப்பாக பல கருத்துகளை பேசி வருகிறார். இதையடுத்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து கம்பீருக்கு மெயில் மூலமாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரின் வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதாக டெல்லி போலிஸார் அறிவித்துள்ளனர்.