வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (11:32 IST)

குடிநீரில் காரைக் கழுவிய கோஹ்லி – அபராதம் என்ன தெரியுமா ?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது காரைக் குடித்தண்ணீரால் கழுவியதால் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்திய அணி தற்போது உலகககோப்பைத் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய அணிக்குத் தலைமை தாங்கி வரும் விராட் கோஹ்லி இப்போது புதிதாக சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியில் விராட் கோஹ்லிக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அதில் கோஹ்லிக்கு சொந்தமான ஆறு விலையுயர்ந்த கார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதைக் கழுவுவதற்காக கோஹ்லியின் உதவியாளர்கள் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்துவதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் கோஹ்லிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.