வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 20 மே 2023 (15:28 IST)

இன்று முக்கியமான ஐபிஎல் லீக் போட்டி.. டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு..!

MS Dhoni
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான 67-வது லீக் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணீ கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார் இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 15 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக இருக்கும்..


Edited by Mahendran