திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (15:15 IST)

டாஸ் வென்ற தல தோனி எடுத்த அதிரடி முடிவு..!

MS Dhoni
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெறும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது.
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனால் மும்பை அணி இன்னும் சற்றுநேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
 
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளிப்பட்டியலை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணியை 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran