புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:22 IST)

ஓவல் டெஸ்ட்டில் போட்டி… ஒத்துழைக்குமா வானிலை!

இன்று தொடங்க உள்ள ஓவல் டெஸ்ட் போட்டி வானிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் ஓவலில் வானிலை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த பகுதியின் வானிலைப் பற்றி வெளியான தகவலின் படி முதல் மூன்று நாட்கள் மேகமூட்டம் காணப்படும் என்றும் நான்காவது நாள் குளிர்ந்த காற்று வீசும் எனவும் ஐந்தாம் நாளில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.