வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (06:33 IST)

வீடியோவில் வைரலான சிறுமிக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி: மத்திய அமைச்சர் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் ஒரு பள்ளி சிறுவனும் சிறுமியும் சாலையில் நடந்து சென்றபோது திடீரென ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினர். இதுகுறித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இந்த் வீடியோவை பார்த்த ஜிம்னாஸ்டிக்கில் பலமுறை தங்கம் வென்ற ரோமானிய நாட்டு வீராங்கனை நாடியா, இருவருக்கும் தனது பாராட்டுக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
 
இதனையடுத்து இவர்கள் இருவரும் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு தரப்படவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் இடையே வலுத்து வந்தது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்த ''ஃபிட் இந்தியா மூவ்மென்ட்'' என்ற ஹாஷ்டேக்கிலும் இந்த வீடியோ பகிரப்பட்டு உலக அளவில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிர்ரன் ரிஜூ அவர்களும் இருவருக்கும் சரியான வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
 
 
இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த இந்த இரண்டு பேர்களுக்கும் தற்போது தேசிய ஜிம்னாஸ்டிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர அனுமதி கிடைத்துள்ளது. இவர்கள் இருவரால் நாடு ஒரு நாள் பெருமைப்பட போவது உறுதி என்பதே பலரது எண்ணமாக உள்ளது