திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:45 IST)

காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்- குரோஷியா

Football world cup
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.
 
 ஏற்கனவே நெதர்லாந்து அர்ஜென்டினா இங்கிலாந்து பிரான்சு ஆகிய 4 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று பிரேசில் மற்றும் குரோஷியா நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன 
 
பிரேசில் மற்றும் தென்கொரியா இடையே நடந்த போட்டியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது. அதேபோல் குரோஷியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இடையே நடந்த போட்டியில் டை பிரேக்கர் மூலம் குரோஷியா வெற்றி பெற்றதையடுத்து தற்போது காலிறுதி போட்டியில் 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன 
 
இன்று மொராக்கோ - ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நாளை சுவிட்சர்லாந்து - போலந்து நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
டிசம்பர் 9 முதல் காலிறுதி போட்டியும், டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி அரையிறுதி போட்டியும், டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva