வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (16:23 IST)

சச்சினுக்கு கிடைத்தது இனி யாருக்கும் கிடைக்காது: பிசிசிஐ அதிரடி!!

கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 
 
சச்சினுக்கு பெரிய அடையாளமாக பார்க்கப்படுவதில் அவரது ஜெர்ஸ்சி எண்ணும் பொருந்தும். 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது 10 என்றிக எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்.
 
அதன்பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த எண்ணை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாகூர் 10 எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்.
 
இதை சச்சின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனால், இதனை முடிவுக்கு கொண்டு வர பிசிசிஐ ஓர் முடிவெடுத்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது, சச்சின் பயன்படுத்திய எண்ணை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க அந்த எண்ணை நீக்குவது சிறந்தது. 
 
இருப்பினும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும், சர்வதேச அல்லாத போட்டிகளில் விளையாடும் போது வீரர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.