ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:23 IST)

மோடி, வினேஷுக்கு போன் செய்யும் தருணத்துக்காகக் காத்திருக்கிறேன்… பஜ்ரங் புனியா ஆவேசம்!

நாடு முழுவதையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதி போட்டிக்கு சென்றுள்ளதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இறுதிப் போட்டியிலும் அவர் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதுதான் இந்தியர்களின் ஒரே ஆசையாக இப்போது உள்ளது.

வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதுமிருந்த வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆனால் இந்திய பிரதமர் மோடி அவருக்கு இன்னும் வாழ்த்து சொல்லவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வினேஷ் போகத் இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் தலைவராக இருந்த பாஜக பிரபலம் மீது பாலியல் புகார்கள் அளித்ததோடு, தலைவர் பொறுப்பில் உள்ளவரை மாற்ற வேண்டும் என சக மல்யுத்த வீரர்களோடு சுமார் 40 நாட்களாக போராட்டமும் நடத்தி வந்தார். இந்த போராட்டத்தின் போது அவர் பல அடக்குமுறைகளை எதிர்கொண்டார் அப்போது அவர் மோடியையும் விமர்சித்துப் பேசினார் என்பதனால்தான் மோடி அவரை பாராட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவரின் சக வீரரான பஜ்ரங் புனியா “மோடி, வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் அந்த தருணத்துக்காக நான் காத்திருக்கிறேன். அப்போது அவர் ‘மீண்டும் இந்தியாவின் மகள்’ ஆகிவிடுவார். டெல்லியில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாத அவருக்கு இப்போது வினேஷுக்கு ஃபோன் செய்யும் துணிவு எப்படி வரும்?.” என ஆவேசமாக பேசியுள்ளார்.