1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (08:15 IST)

3வது ஒருநாள் போட்டியில் இருந்து வார்னர் விலகல்: ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக வார்னரின் ஓபனிங் ஆட்டம் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக இருந்தது என்றும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
3வது ஒருநாள் போட்டியில் இருந்து வார்னர் விலகல்
இந்த நிலையில் நேற்று டேவிட் வார்னர் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக நேற்றே அவர் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, டேவிட் வார்னர்க்கு பதிலாக டார்சி ஷார்ட் என்பவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி வார்னரின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் ஒரு சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது