புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (08:34 IST)

2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று அடிலைய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டாஸில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் செய்யவுள்ளனர்.

இந்திய அணியில் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்குமார், ஷமி, சிராஜ் ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியில் கேர்ரி, பின்ச், கவாஜா, மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோனிஸ், மாக்ஸ்வெல், ரிச்சர்ட்ஸ்சன், லியோன், சிடில், பெஹ்ரெண்டாஃப் ஆகியோர் உள்ளனர்.