புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (08:43 IST)

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்திய இந்திய அணி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக மீண்டும் வீறுகொண்டு எழுந்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடைசியாக நடைபெற்ற 11 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியே அடையவில்லை. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்ததால் அந்த அணியின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.
 
அதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியாவால் நேற்று பத்தாவது வெற்றியை பெற முடியவில்லை. இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை தொடர் வெற்றிக்கும் இந்திய அணி நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலிலும் ஆஸ்திரேலியாவை நான்காவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. 
 
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என மூன்றிலும் அடுக்கடுக்காக செய்த தவறுகளினால்தான் தோல்வி அடைந்தது. நன்றாக விளையாடி கொண்டிருந்த ஃபின்ச் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்ற ஒரு காரணமாக இருந்தது. அதேபோல் நேற்றைய ஆஸ்திரேலிய அணியில் இன்னொரு பந்துவீச்சாளர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் கருத்து கூறினர். அதேபோல் நேற்றைய போட்டியில் கார்ரே நன்றாக பேட்டிங் செய்து அதிரடியான அரை சதம் அடித்திருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் அவர் சொதப்பியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.