ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (12:35 IST)

ஜோகோவிச் குறித்து தரகுறைவாக பேசிய செய்தியாளர்கள்! – நேரடியாக ஒளிபரப்பானதால் அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய செய்தி தொலைக்காட்சி ஒன்றில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் குறித்து தரகுறைவாக பேசப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செர்பிய நாட்டு டென்னிஸ் வீரரான ஜோகோவிச் டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில் மிகப்பெரும் பிரபலமானவர். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா சென்ற ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை என அவரை திரும்ப அனுப்ப அதிகாரிகள் முயற்சித்தனர்.

ஆனால் இதனை எதிர்த்து ஜோகோவிச் தரப்பு நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றதால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நியூஸ் சேனல் ஒன்றில் செய்தி வாசிக்க தயாராகிக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர்கள், மைக் ஆனில் இருப்பது தெரியாமல் ஜோகோவிச் குறித்து கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இது நேரடியாக ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளார்.