ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (10:35 IST)

சிட்னி டெஸ்ட்டிலும் மண்ணைக் கவ்வபோகும் இங்கிலாந்து!

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த வருட ஆஷஸ் தொடர் ஆரம்பம் முதலே ஒரு பக்க சார்பாகவே செல்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஆஸி அணி இங்கிலாந்தை அடித்து துவைத்து வருகிறது. ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகளை ஆஸி வென்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி 416 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போலவே சொதப்ப ஆரம்பித்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்ததால் கௌரவமான ஸ்கோரை எட்டியது. 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து களமிறங்கிய ஆஸி தற்போது வரை 4 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் முன்னிலை 311 ரன்கள் உள்ளது. இன்னும் 100 ரன்களை அடித்துவிட்டு டிக்ளேர் செய்து வெற்றி பெற முயற்சி செய்யும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல சொதப்பினாலும் இந்த டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி என்ற நிலையே உள்ளது.