AsianGames2023- ஆடவர் மற்றும் மகளிர் செஸ் போட்டியில் வெள்ளிவென்ற இந்தியா
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.
இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா ஹாக்கி, கிரிக்கெட், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறப்பாக விளையாடி 100 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில், இன்று, பிலிப்பைன்ஸுக்கு எதிரான அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் ஹரிகிருஷ்ப்ணா அடங்கிய ஆடவர் செஸ்ட் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது
அதேபோல் கொரியாவுக்கு எதிரான போட்டியில் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, வைஷாலிம் வந்திகா கர்வால் மற்றும் சவிதா அடங்கிய இந்திய அணி 4-0 என்ற புள்ளி கணக்கில் வெள்ளியை வென்றது.